சற்று முன்
Home / செய்திகள் / மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் தப்பியோட்டம்

முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலுள்ள ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 9ம் திகதி மாலை ரியூசன் வகுப்பு முடிந்து, இரவு 07.00 மணியளவில் வீடு திரும்ப முற்பட்ட குறித்த மாணவியை, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி, சந்தேகநபர் தனது காரில் ஏற்றியுள்ளார்.

எனினும், பாழடைந்த பகுதியொன்றில் வைத்து அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, மாணவி காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறாத மாணவி, இது குறித்து உறவினர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், மாணவியின் தாயிடம் இதனைக் கூற அவர், பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரான ஆசிரியர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com