சற்று முன்
Home / செய்திகள் / மாணவர்களை மேசன் கூலியாக ஈடுபடுத்திய அதிபர் – செய்தியாக்கிய ஊடகவியலாளருக்கு மிரட்டல் !

மாணவர்களை மேசன் கூலியாக ஈடுபடுத்திய அதிபர் – செய்தியாக்கிய ஊடகவியலாளருக்கு மிரட்டல் !

சுயாதீன தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவரை தென்மராட்சி பாடசாலையொன்றின் அதிபருடைய கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் நண்பகல் வேளையில் வறணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டட வேலைக்கு மேசன் தொழிலாளர்களுக்கு உதவியாக மாணவர்கள் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதனை அவதானித்த குறித்த ஊடகவியலாளர் புகைப்படங்களுடன் குறித்த செயற்பாட்டை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

இதனால் குறித்த பாடசாலையின் அதிபரின் கணவர் ஊடகவியலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முகநூலில் எப்படி இந்த தகவலை பகிர்வீர்கள் இதற்காக நீர் பொலிஸ் நிலையம் வர வேண்டிய நிலை ஏற்படும் என அச்சுறுத்தியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com