சற்று முன்
Home / செய்திகள் / மாகாண எதிர்க்கட்சித் தலைவருடன் அளுநர் இரவிரவாக மந்திராலோசனை

மாகாண எதிர்க்கட்சித் தலைவருடன் அளுநர் இரவிரவாக மந்திராலோசனை

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே நேற்று இரவு அவசரமாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறார். தமிழரசுக் கட்சி உறுப்பிரகள் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை நேற்றிரவு கையளித்துச் சென்றனர். அதன் பின்னராக உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுநரிடமிருந்து அழைப்புவந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தான் கையெழுத்திடவில்லை என வாகீசத்திற்குத் தெரிவித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் கையொப்பமிட்டார்களா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் பதிலளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com