சற்று முன்
Home / செய்திகள் / மன்னாரில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் அபாயம்

மன்னாரில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் அபாயம்

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்குப் பகுதியில் இறால் , மற்றும் நண்டு வளர்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி ஆயிரத்து 800 மில்லியன் ரூபா பணம் வனஜீவராசி திணைக்களத்தின் செயல்பாட்டினால் திரும்பிச் செல்லும் ஆபத்து கானப்படுவதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு கடந்த 22ம் திகதி வருகை தந்த   கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்சா  தலமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சணை தொடர்பில்  உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

மன்னார் மாவட்டத்தில் அதிக கடல் பிரதேசமும் வளர்ப்புத் திட்டங்களிற்கு உகந்த பகுதிகளும் கானப்படுகின்றன. இதிலே மாந்தை மேற்கில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் கடற்கரை  நிலப்பரப்புக்கள் உள்ளது. இதிலே இலங்கையிலேயே அதிகமாக கடல் வாள் உயிரிணங்கள் வளர்க்க உகந்தபகுதிகள் இங்குதான உள்ளது. இவ்வாறு கடல்வாள் உயிரிணங்களில் இறால் , நண்டு போன்றவை அதிகம் வளர்க்ககூடிய பிரதேசம் இது . இருப்பினும் இந்த 60 ஆயிரம் நிலப்பரப்பில் மிகவும் உகந்த பகுதியாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.

இவ்வாறு 20 ஆயிரம் ஏக்கர் உள்ள நிலப்பரப்பில் வெறும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் மீனவர்களிற்கு 50 ஏக்கரிற்கும் உட்பட்ட நிலத்தை வழங்கி இறால் வளர்ப்பு நண்டு வளர்ப்பு போன்ற திட்டத்திற்காக எமக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி 2016ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டபோதும் இன்றுவரை அந்த திட்டத்தின் ஆரம்ப பணியைக்கூட மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நிதி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவ்வாறு அந்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியாதவாறு நிதி கிடைக்குமா ? அல்லது இல்லாமல் போகுமா என்ற நிலமைக்கு காரணம் இந்த திட்டத்திற்காக நாம் சிபார்சு செய்யும் 3 ஆயிரத்து 500 ஏக்கர. உட்பட 22 ஆயிரம் ஏக்கர. நிலம்தமதுக்குச் சொந்தமானது என வன ஜீவராசிகள் திணைக்களம் அரசிதழ் வெளியிட்டமையினால் எவருமே அப்பகுதிக்குள் நுழைய முடியவில்லை.

எனவே இந்த நண்டு வளர்ப்பிற்கு உகந்த பிரதேசத்தை விடுவிக்க இப்பகுதி எம்பீக்கள் அமைச்சர் , பிரதேச செயலாளர் , மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் வன ஜீவராசித் திணைக்களத்திணையும் உள்ளடக்கிய வகையில் அவசர சந்திப்பினை மேற்கொண்டு குறித்த நிதியை வீணாகது பாதுகாத்து பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும். என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com