சற்று முன்
Home / செய்திகள் / மன்டைதீவில் டைனமேற் மீன்பிடி – இருவருக்கு அபராதம்

மன்டைதீவில் டைனமேற் மீன்பிடி – இருவருக்கு அபராதம்

யாழ்ப்பாணம் மன்டைதீவுப் பகுதியில் டைனமேற் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் தீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் 30 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் குருநகர.ப் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் நேற்று முன்தினம் மன்டைதீவுக் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தவேளையில் வெடிமருந்தை ( டைனமேற் ) பயன்படுத்திய குற்றச் சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் சான்றுப்பொருட்களையும் கடற்படையினர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இரு மீனவர்களையும் சான்றுப்பொருட்களையும் நீரியல் வளத் திணைக்களம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நீதவான் நீதிமன்றம் இல.02ல் வெடிமருந்தை பயன்படுத்தி மீன்பிடியில் ஊடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் முற்படுத்தினர்.

இதன்போது குறித்த இரு மீனவர்களும் குற்றச் சாட்டினை ஏற்றுக்கொண்டதன் பெயரில் இரு மீனவர்களிற்கும் தலா 15 ஆயிரம் ரூபா வீதம் குற்றப்பணம் விதித்து பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் தீர்ப்பளித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com