சற்று முன்
Home / செய்திகள் / மத்திய குழுவை அறிவித்தார் விக்கி – ஓய்வூதியர்களுக்கே முக்கியத்துவம்

மத்திய குழுவை அறிவித்தார் விக்கி – ஓய்வூதியர்களுக்கே முக்கியத்துவம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று 20 நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனால் தொடங்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பமாகிய படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வயோதிபர் சங்க கூட்டமோ என விமர்சனங்கள் எழத் தொடங்கியிருந்தன. அவற்றினை ஆமோதிப்பது போல தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுவின் உறுப்பினர்கள் அறிவிப்பும் ஓய்வுபெற்ற முதியவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் அமைந்துள்ளது.

மத்தியகுழு விபரம்

ஸ்தாகரும் செயலாளர் நாயகமும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பொருளாளரும் உப செயலாளர் பொருளாதார விவகாரங்களும் பேராசிரியர் வி.பி.சிவநாதன்
உப செயலாளர் கொள்கை பரப்பு திரு.க.அருந்தவபாலன்
இணை உப செயலாளர் நிர்வாகம் திரு.எஸ்.சோமசுந்தரம்

இணை உப செயலாளர் நிர்வாகம் திரு.ஆ.ஆலாலசுந்தரம்
உப செயலாளர் மகளிர் அணி திருமதி இளவேந்தி நிர்மலராஜ்
உப செயலாளர் இளைஞர் விவகாரங்கள் கலாநிதி என்.கார்த்திகேயன்
உப செயலாளர் ஊடகமும் செயற்றிட்ட ஆக்கமும் திரு.தவச்செல்வம் சிற்பரன்
உப செயலாளர் சமூக பாதுகாப்பு நுபெ.தி.கெங்காதரன்
உப செயலாளர் கலை கலாச்சாரம் பாரம்பரியம் திரு.தம்பு சிவசுப்பிரமணியம்
உப செயலாளர் சட்ட விவகாரங்கள் ————————————-
மத்திய குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

இளைஞர் அணி இணைப்பாளர் திரு.கே.கிருஸ்ணமீனன்

இளைஞர் அணி தொகுதி பொறுப்பாளர் திரு.வி.அமல்

தொகுதி அமைப்பாளர் திரு.செல்லத்தம்பி சிறிதரன்

தொகுதி அமைப்பாளர் திரு.அந்தோனி கபிரியேல்

தொகுதி அமைப்பாளர் திரு.அன்னலிங்கம் அன்னராசா
தொகுதி அமைப்பாளர் திரு.சிவசுப்பிரமணியம் நந்தகுமார்

தொகுதி அமைப்பாளர் திரு.இரா.மயூதரன்
தொகுதி அமைப்பாளர் திரு.அஅன்புராஜ்
மகளிர் அணி இணைப்பாளர் செல்வி.புஸ்பராசா சுமிதா
தொகுதி அமைப்பாளர் திரு.வி.ஞானமூர்த்தி
தொகுதி அமைப்பாளர் திரு.ராஜா துரைசிங்கம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com