சற்று முன்
Home / செய்திகள் / மண்டைதீவில் காணி அளவிடும் முயற்சி முறியடிப்பு

மண்டைதீவில் காணி அளவிடும் முயற்சி முறியடிப்பு

மண்டைதீவில் கடற்படையினரின் பாவனைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்பு நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கூட்டாக இந்த நடவடிக்கையில் பங்கெடுத்தன.

மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தில் உள்ள 4 குடும்பங்களிற்கு சொந்தமான 62 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் அறிவித்தல், காணி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், பிரதேசத்திலுள்ள தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளின் இளைஞர் அணியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் விந்தன் கனகரட்ணம், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், பா.கஜதீபன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் க.சுகாஷ், ந.காண்டீபன், ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

யாழ் நில அளவையாளர் திணைக்களத்தினர் காணியை அளவீடு செய்ய முயன்றபோது, அனைத்து தரப்பினரும் கூட்டாக எதிர்த்தனர்.

இதனால் அளவீடு செய்ய முடியாத நிலையில், அளவீட்டிற்கு ஒத்துழைக்கும்படி பொலிசார் கோரினர். எனினும், பொதுமக்களின் காணியை அளவீடு செய்ய முடியாதென போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து, காணியை வழங்க சம்மதம் இல்லையென காணி உரிமையாளர்களின் எழுத்து மூல அறிவித்தலைபெற்று, நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com