சற்று முன்
Home / செய்திகள் / மணிவண்ணனிடம் வழக்குச் செலவுக்குக் காசு கேட்ட சுமந்திரன்

மணிவண்ணனிடம் வழக்குச் செலவுக்குக் காசு கேட்ட சுமந்திரன்

தமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் இருந்து வழக்கு செலவைத் தருமாறு கோரியுள்ளார்.

வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும் , வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி , எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது ,

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தாக்கல் செய்த வழக்கில் கட்சியில் இருந்து அவரை நீக்குவதற்கும் , சபையின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் நீதிமன்றினால் கட்டானை வழங்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சார்பில் முன்னிளையானேன். இந்த வழக்கு நீதிமன்றுக்கு வெளியே தீர்க்கப்பட்டு விட்டது என எனக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு இருந்தது.

அதனை நான் நீதிமன்றுக்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவ்வாறு தனக்கு எதுவம் தெரியபடுத்தவில்லை என தெரிவித்து வழக்கினை மேற்கொண்டு நடத்த கேட்டுக்கொண்டார்.

அதன் போது நான் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினை தெரிவித்திருந்தேன். இந்த வழக்கு சரியான முறையில் தாக்கல் செய்யப்படவில்லை கூட்டினைக்க படாத நிறுவனத்திற்கு எதிராக மூவரின் பெயரை குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்வதாயின் சிவில் நடவடிக்கை கோவை பிரிவின் 16 கீழ் நீதிமன்ற அனுமதி பெற்று ஊடகங்களில் அதனை தெரியப்படுத்த வேண்டும்.

அவற்றை நான் மேற்கோள் காட்டி வழக்கினை முதல் நிலையிலையே தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்து சமர்ப்பணம் செய்தேன்.

அதன் பின்னர் வழக்காளியின் சட்டத்தரணி குறித்த வழக்கு சமரசமாக தீர்க்கப்பட்டு உள்ளது தன்னுடைய கட்சி காரர் தனது வழக்கை மீள பெற உள்ளதாக தெரிவித்தார். அதன் போது நீதிபதி வழக்காளியிடம் நேரடியாக கேட்ட போது ஆம் நான் வழக்கினை மீள பெற விரும்புகிறேன் என தெரிவித்தார்.

வழக்கின் ஆரம்பித்தில் நான் சமரசம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த போதே வழக்கினை மீள பெற்று இருந்தால் வழக்கு செலவு கேட்டு இருக்க மாட்டேன். அப்படியில்லை என தர்க்கித்து வழக்கு தள்ளுபடி செய்யப்படவுள்ளது என தெரிய வந்ததும் வழக்கினை மீள பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை கேட்டு இருந்தேன்.

அதனால் எனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என தெரிவித்தார்.

அதன் போது ஊடகவியலாளர்கள் வழக்கு செலவாக எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டீர்கள் என சட்டத்தரணி சுமந்திரனிடம் கேட்ட போது . அதற்கு பதிலளிக்காமல் சென்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com