சற்று முன்
Home / செய்திகள் / மட்டு. மாவட்ட இலக்கிய விழா – ஐவருக்கு கலைச்செம்மல் விருது

மட்டு. மாவட்ட இலக்கிய விழா – ஐவருக்கு கலைச்செம்மல் விருது

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

2017ஆம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுகள் திருமதி வல்லிபுரம் மீனாம்பிகை, முருகேசு தம்பிப்பிள்ளை, கணபதி செல்லத்துரை, அலி முகம்மது முஸ்தபா, இராசமாணிக்கம் எதிர்மன்னசிங்கம் ஆகியோருக்கு அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் இலக்கிய படைப்பாளிகள் , இலக்கிய ஆர்வளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் , மாவட்ட மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதேவேளை மாவட்ட கலாசார அதிகார சபையினால் நடத்தப்பட்ட குறும் திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாடுமீன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த இலக்கிய விழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் எ . நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள் , கலைஞர்கள், இலக்கிய வாதிகள் , கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் , ஆசிரியர்கள் கலை, இலக்கிய படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com