சற்று முன்
Home / செய்திகள் / “மட்டக்களப்பு தேவாலய குண்டுத் தாக்குதல் சுமந்திரனுக்கு முன்னரே தெரியும்” – செய்தியால் சிறப்புரிமை மீறியதாக குற்றச்சாட்டு

“மட்டக்களப்பு தேவாலய குண்டுத் தாக்குதல் சுமந்திரனுக்கு முன்னரே தெரியும்” – செய்தியால் சிறப்புரிமை மீறியதாக குற்றச்சாட்டு

டெய்லி மிரர் பத்திரிக்கை தனது சிறப்புரிமையை மீறியது தொடர்பான சுமந்திரனின் பாராளுமன்ற பேச்சு – தமிழ் மொழிபெயர்ப்பு:

பாராளுமன்ற சிறப்புரிமை மீறல்

இன்றைய அமர்வு ஆரம்பிக்கும் இத்தருணத்தில் நான் பின்வரும் சிறப்புரிமை சார் கேள்வியை எழுப்ப விழைகிறேன்.

ஏப்ரல் 21, 2019 அன்று பல தற்கொலை குண்டுதாரிகளால் இழைக்கப்பட்ட பேரழிவின் துயர் சம்பவங்களை நாம் அனைவரும் அறிவோம். வரவிருந்த தாக்குதல் பற்றி புலனாய்விலிருந்து தகவல் பெறப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். சில அரசியல்வாதிகள் இதை அறிந்திருந்தும் ஏனையோரை எச்சரிக்காது போனது பற்றி குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், Daily Mirror பத்திரிகையின் முதற் பக்கத்தில் 1 மே 2019 அன்று “Political gossip” (அரசியல் கிசுகிசு) பிரிவில், நான் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு ஈஸ்டர் தினத்தன்று செல்லவிருந்ததாகவும், அத்தேவாலயம் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என தனக்கு புலனாய்வு தகவல் இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்ச என்னை எச்சரித்த காரணத்தினால் நான் அங்கு செல்லாமல் விட்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது ஒரு அப்பட்டமான பொய். இது பாராளுமன்ற உணவகத்தில் எனக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்குமிடையே இடம்பெற்ற உரையாடல் ஒன்றை மேற்கோள் காட்டி அமைக்கப்பட்டதும், இவ்வாறன இன்றைய சூழ்நிலையில் ஆபத்தானதும் ஆகும்.

நான் இதை கண்டதும், இது உண்மையில்லை – நான் வழமை போல கொழும்பில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்றிருந்தேன் என்றும், ஈஸ்டர் தினத்திற்கு மட்டக்களப்பிற்கு செல்வதாக நான் திட்டமிட்டிருக்கவில்லை என்றும், மேலும் குண்டுவெடிப்புக்கு முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் எனக்கு இவ்வாறன எந்த எச்சரிக்கையும் வழங்கியிருக்கவில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்தேன்.

அடுத்தநாள், அதாவது 2 மே 2019 அன்று Daily Mirror பத்திரிக்கையானது இன்னோர் “Political gossip” (அரசியல் கிசுகிசு) ஐ ‘தெளிவுபடுத்துதல்’ எனும் பெயரில் பிரசுரித்திருந்தது. அதில், உண்மையில் எதிர்க் கட்சித் தலைவர் திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 அன்று ஒரு “ கும்பல் தாக்குதல்” குறித்து என்னை எச்சரித்திருந்ததாகவும் முன்னய தின கிசுகிசுவில் இது பற்றியே கூறப்பட்டிருந்ததாகவும் கூறி, இத் “தவறான மொழிப்பெயர்ப்பு” க்கு மனம்வருந்தி பிரசிக்கப்பட்டிருந்தது. இதுவும் பொய்யானது. ஏனெனில் எதிர்க் கட்சித் தலைவர் எனக்கு எந்த கும்பல் தாக்குதல் பற்றியோ அல்லது எதிர்ப்பு பற்றியோ ஒருபோதும் கூறியிருக்கவில்லை.

நான் மேற்கூறிய இரு பிரசுரங்களையும் சமர்ப்பிக்கிறேன்.

மேற்கூறிய இரு பிரசுரங்களும் பாராளுமன்ற உணவகத்தில் நிகழ்ந்த உரையாடலை தவறாக மேற்கோள் காட்டி, ஓர் பாராளுமன்ற உறுப்பினராக, பாரியளவில் என் கௌரவதிற்கு பங்கம் விளைவித்து, பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என் சிறப்புரிமையை பங்கப்படுத்தி உள்ளது. மேலும் இக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கற்பனை செய்யப்பட்ட கும்பல் வன்முறைகள், எதிர்ப்புகள் பற்றி நான் முன்பே அறிந்திருந்தேன் என மக்களை நம்ப வைப்பதற்கென எழுதப்பட்ட இப்பிரசுரங்கள் இவ்வாறான இன்றைய சூழ்நிலைகளில் மிகவும் ஆபத்தானதாகும்.

பல்வேறான ஆபத்தான நிலைமைகளுக்கு மத்தியில் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறிய இந்த பத்திரிகையின் அடவடித்தனமான, நெறிதவரிய நடத்தைக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ. சபாநாயகரை தயவாக வேண்டுகிறேன்.

நன்றி
எம். ஏ. சுமந்திரன்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com