சற்று முன்
Home / செய்திகள் / மகிந்த விமல் அணியினரையே தீவிரவாதிகள் என்றாரா ஜனாதிபதி !

மகிந்த விமல் அணியினரையே தீவிரவாதிகள் என்றாரா ஜனாதிபதி !

கொழும்பிலுள்ள அறை ஒன்றில் தங்கியிருந்தவாறு சில தீவிரவாதிகள் கத்துகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழில் அரச நத்தார் விழாவில் (20.12.2015) கலந்துகொண்டு உரையாற்றியபோது கடுமையாக சாடியது மகிந்த விமல் அணியினரையே என  தெரியவருகிறது.

கொழும்பிலுள்ள அறை ஒன்றில் தங்கியிருந்தவாறு சில தீவிரவாதிகள் நாம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் எதிரான கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இந்த அரசு நாட்டினை புலிகளிடம் காட்டிக்கொடுத்துவிடும் என கத்துகின்றார்கள். நாட்டில் எழுத்து மற்றும் பேச்சுச் சுதந்திரம் இ;ந்த அரசினால் முழுமையாக்கப்பட்ட நிலையில் அதனை இந்தத் தீவிரவாதிகள் தவறாக பயன்படுத்த முனைகிறார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இவர்கள் இந்த அரசைக் கவிழ்த்து புதிய அரசு ஒன்றினை நிறுவ முயற்சிக்கின்றார்கள். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். நாட்டு மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறானதொரு மாற்றத்தினை பாராளுமன்றத்தினூடாக ஏற்படுத்த முனைந்தால் அதற்கு இடமளிக்கமாட்டார் எனக் குறிப்பிட்டார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com