சற்று முன்
Home / செய்திகள் / ”மகிந்தவின் கிறிஸ் பூதாம் !! மைத்திரியின் குள்ள மனிதன் ?? – குடாநாட்டை பதற்றத்தில் வைத்திருக்க முயற்சியா ??

”மகிந்தவின் கிறிஸ் பூதாம் !! மைத்திரியின் குள்ள மனிதன் ?? – குடாநாட்டை பதற்றத்தில் வைத்திருக்க முயற்சியா ??

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ் பூதம் எனும் பெயரில் யாழில் மக்கள் மத்தியில் பயப்பீதியை ஏற்படுத்தி கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவில் சில குழுவினர் ஈடுபட்டதுபோல தற்போது மைத்திரிபாலசிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் குள்ள மனிதர்கள் எனும் புதிய நாடகம் ஒன்றினை மேற்கொண்டு மக்களை பதற்றமான சூழலில் வைத்திருக்க அரசாங்கம் முனைவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்திருந்த சூழலில் வாள்வெட்டுக்களுடன் கூடிய தொடர் கொள்ளைச் சம்பவங்களும் சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதன் பின்னணியில் வலிகாமத்தின் சண்டிலிப்பாயில் முகத்தை துணியினால் மூடிய வாள் வெட்டு கும்பலொன்று மணித்தியாலக்கணக்கில் வீதியால் போவோர் வருவோரை சாகவாசமாக தரித்திருந்து அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வீதியால் சென்ற வாகனங்களையும் முகமூடி ரௌடிகள் அடித்து நொறுக்கியதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவனை மடக்கிப்பிடித்து “உயிர் வேண்டுமெனில் ஓடு எனக் கூறி, மோட்டார் சைக்கிளை பறித்து அவரை கால்நடையில் அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.

சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்மித்த பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நடந்தது. நேற்றிரவு 9 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி 8 மோட்டார்சைக்கிளில் வந்த பத்துக்கும் அதிகமான ரௌடிகளே இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வாள்களுடனும் மது போதையிலும் நடமாடிய ரௌடிகளை கண்டு மக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினார்கள். வாகனங்களை கைவிட்டு ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். நீண்டநேரமாக ரௌடிகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே குள்ள மனிதர்களென்ற போர்வையில் தாக்குதல்களில் குறித்த கும்பல் ஈடுபடுவதாகவும் முன்னைய கிறீஸ் மனிதர்கள் போல மக்களை அச்சமூட்டி வீடுகளுள் முடங்க வைக்கும் நாடகமா இதுவென கேள்வி எழுந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com