சற்று முன்
Home / செய்திகள் / மகனின் மரணத்தை நண்பர்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திவிட்டார்கள் – தாயார் வருத்தம்

மகனின் மரணத்தை நண்பர்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்திவிட்டார்கள் – தாயார் வருத்தம்

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோராகிய நாங்கள் தெரிவிப்பது யாதெனில், 20.09.2018 மரணமடைந்த கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் வெளிவந்த வண்ணமுள்ளமை பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு மேலும் மேலும் மன வேதனையை ஏற்படுத்துகின்றது.

கஜன் 2012 ஆம் ஆண்டிலிருந்து முழு மனதோடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக மக்கள் பணி புரிந்து வருகின்றார். ஒரு போதும் இடமாற்றத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர் அல்ல. பெற்றோராகிய நாங்கள் கேட்டும் கூட இடமாற்றம் கோர மறுத்து வந்துள்ளார். அவரது பிரதேச பிரிவுக்குட்பட்ட மக்களே இதற்கு சாட்சியாக உள்ளனர். அவர் அம் மக்களின் பேரன்பையும் அபிமானத்தையும் பெற்ற பொறுப்புள்ள ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார்.

இவ்வாறிருக்க இடமாற்றம் கோரி அது கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. சம்பவம் நடைபெற்றதாக வந்த திகதியே முழுத்தவறானது. 17.09.2018 சம்பவம் நடைபெற 19.09.2018 என பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலருடன் மிகுந்த புரிந்துணர்வுடன் இணக்கமாகவும் இருந்து செயற்பட்டு தமது பிரதேச மக்களுக்கு மேலான சேவையை கஜன் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நடந்த சம்பவமானது அவரது தனிப்பட்ட முடிவினால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இவரின் மரணத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாபம் தேட முனைவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

எனவே நடுநிலையான சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், ஊடகங்கள் இங்கு இருப்பது உண்மையானால், இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுமுன் அது பற்றிய உண்மை தன்மைகளை அறிய வேண்டும் என்பதுடன் இந்த மறுப்பு செய்தியை வெளியிடுமாறு மரணமடைந்தவரின் குடும்பத்தவர் ஆகிய நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com