சற்று முன்
Home / செய்திகள் / பொலிஸ் எதிர்ப்பை மீறி செம்மணியில் முள்ளிவாய்க்கால் வார நினைவேந்தல்

பொலிஸ் எதிர்ப்பை மீறி செம்மணியில் முள்ளிவாய்க்கால் வார நினைவேந்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு இன்று யாழ்ப்பாணம் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர். எனினும் சுமார் 30 நிமிடங்களின் பின் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நினைவுச் சுடரை ஏற்றுவதற்காக வந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு அனுமதி மறுத்தனர்.

அங்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பொலிஸாருடன் பேச்சு நடத்தினர்.

எனினும் சுமார் 30 நிமிடங்களாக பொலிஸாரால் அனுமதியளிக்கப்படவில்லை.அங்கு இராணுவத்தினரும் வருகை தந்துள்ளதுடன், நினைவஞ்சலி செலுத்த முடியாது எனவும் திரும்பிச் செல்லுமாறும் பொலிஸார் பணித்தனர்.பின்னர் சமூக இடைவெளியைப் பின்பற்றி நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட்து.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com