சற்று முன்
Home / செய்திகள் / பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கோர விபத்து – 21 பேர் காயம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கோர விபத்து – 21 பேர் காயம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மொனரதொன்ன பகுதியில் இன்று (28) காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டுவன்வில பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கட்டேனர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரு வாகனங்களினதும் ஓட்டுனர்கள் உட்பட 21 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் வெலிகந்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com