சற்று முன்
Home / செய்திகள் / “பொய்யின் வலியை அனந்தி உணர்ந்தார்” – சத்தியலிங்கம் உருக்கம்

“பொய்யின் வலியை அனந்தி உணர்ந்தார்” – சத்தியலிங்கம் உருக்கம்

என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதற்கு காரணமாக இருந்தவர் அமைச்சர் அனந்தி. அவர் மீது இன்று குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது நான்பட்ட வலியை அவர் உணர்ந்திருப்பார். என்மீது பொய்யுரைத்தவர்கள் அதன் வலியை உணரவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அமைச்சர் அனந்தி சசிதரனின் ஆயுத விவகாரம் தொடர்பாக பேசப்படும்போதே சத்தியலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சுகாதார அமைச்சராக இருந்த நான் அந்த அமைச்சு பதவியிலிருந்து விலகும்போது சுகாதார அமைச்சிலிருந்து கோவைகளை எடுத்து சென்றதாக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றினை முதலமைச்சருக்கு கூறியவர் அமைச்சர் அனந்தி சசிதரனே.

இன்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டு க்கள் சுமத்தப்படுகின்றது. இங்கே அவர் மன வருத்தத்துடன் பேசுகிறார். அவருடைய மனவேதனையை நான் அறிந்து கொள்கிறேன். ஆனாலும் எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியபோது அதனால் நான்பட்ட வலியை அமைச்சர் அனந்தி இப்போது உணர்ந்திருப்பார். உணரவேண்டும் என கூறினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com