சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / பொங்கல் விழாவும் இசை நிகழ்வும்

பொங்கல் விழாவும் இசை நிகழ்வும்

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 01-07-2017 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெறும். அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணி பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று மல்லாகம் குளமங்காலில் நடைபெற்றது. இதில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com