சற்று முன்
Home / செய்திகள் / பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குதல் – செயலமர்வு

பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குதல் – செயலமர்வு

ஜசாக் நிறுவனமானது USAID –SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்கின்ற பெண்களினை அரசியல் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு அரசியல் ஆர்வமுள்ள செய்யப்பட்ட 25 பெண்களுக்கான பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை (18.09.2018) அன்று தியாகி அறக்கொடை நிறுவன (TCT) மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மைய நிறுவன இணைப்பாளர் திரு.ந.சுகிர்தராஜ் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களினை அரசியலில் ஊக்கப்படுத்துகின்ற வகையில் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

முழு நாள் பயிற்சி நிகழ்வின் வளவாளராக இத்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தேர்ச்சி பெற்ற அபிராமி வன்னியகுலம் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறைகளை சேர்ந்த 25 பெண்கள் பயிற்சிகளை பெற்றுக்கொண்டார்கள். இப்பயிற்சி நிகழ்வுகள் தொடர் செயற்பாடுகளாக இடம்பெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com