சற்று முன்
Home / செய்திகள் / புதிய ஆளுநர் நியமங்களால் பதறுகிறது தமிழரசுக் கட்சி !

புதிய ஆளுநர் நியமங்களால் பதறுகிறது தமிழரசுக் கட்சி !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போது மகிந்த அரசை ஆதரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோள்களை ஆராய்ந்துகூடப் பார்க்காது ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் எனும் பெயரில் ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமே ஆதரரிப்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நிலைப்பாடு ஜனாதிபதியை சின மூட்டியது.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான அணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றக் கலைப்பு விவகாரத்திற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று ஜனாதிபதியைத் தோற்கடித்திருந்தனர். இதனால் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானார்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பழிவாங்கும் வகையில் ரணில் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிரியாக பார்க்கப்படும் ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன நியமித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநாரகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான நிலைப்பாடுகளை துணிவுடன் எடுக்கக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் ஜனாதிபதியின் ஆளுநர் நியமனங்கள் தமக்கு பாதகாமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது.

இந்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பழிவாங்கல் செய்யவேண்டாம் என ஜனாதிபதிக்கு எதிராக மீண்டும் கோசங்கள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். இன்று வடமராட்சியில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் “நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இது தொடர்பில் குறிப்பிட்ட கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் , நாடாளுமன்ற உறுப்புரிமையே வேண்டாமென தனது பதவியை துறந்த ஹிஷ்புல்லாவை, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி நியமித்துள்ளமையானது கூட்டமைப்பு மீது கொண்ட கோபத்தைக் காட்டுகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com