சற்று முன்
Home / செய்திகள் / புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு யாழ்.மாவட்ட இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்

புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு யாழ்.மாவட்ட இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்

தொழில் நிமிர்த்தமாக பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் (Drone Camera)வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றினை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பதிவினை மேற்கெள்ளுமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

வீடுகள் வியாபாரா நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சேதனை நடவடிக்கைகளின் போது அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்காத பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் (Drone Camera) கண்டுபிடிக்கப்படுமாயின் அவற்றினை வைத்திருந்த குற்றத்திற்காக நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்றும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

நாட்டில் இன்று நிலவவும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு சிவில் விமான அதிகாரி அவர்களினால் CA-JS-2016 மற்றும் GEN-001 ஆம் இலக்கத்தில் 2017.01.01 திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கேற்ப சகலவிதமான பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் (Drone Camera) பறக்க விடுதலானது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாண தீபகற்பத்தில் வாழும் தங்களிடம் பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் (Drone Camera) இருக்குமாயின் அவை சம்பந்தமான சகல விதமான விபரங்களையும் 2019 மே மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னராக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

அவ்வாறு பதிவு செய்யப்படாத பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் (Drone Camera) இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது தங்கள் வசமிருந்து கண்டுபிடிக்கப்படுமாயின் தாங்கள் கைது செய்யப்படுவதுடன் குறித்த நீதிச்சட்டத்திற்கு ஏற்ப மிகவும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com