சற்று முன்
Home / செய்திகள் / பிரமிட் மோசடி கும்பலான குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடை

பிரமிட் மோசடி கும்பலான குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடை

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

குறித்த நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
வர்த்தக முறை.
நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் பொருள் ஒன்றினை ஒருவர் முன்னதாக ஒரு தொகை பணத்தினை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அவர் அந்த பொருளை இருவருக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை அந்த பொருளை வாங்க வைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் இருவரும் அந்த பொருளினை வாங்கினால் அறிமுகம் செய்தவருக்கு ஒரு தொகை பணம் தரகு பணமாக கிடைக்கும்.
பின்னர் குறித்த இருவரும் தலா இருவருக்கு அந்த பொருளை அறிமுகம் செய்து வாங்க வைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் இருவரும், தலா இருவருக்கு அந்த பொருளினை விற்றால் , விற்றவருக்கு ஒரு தொகை பணமும் அதனை அவர்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்தவருக்கு ஒரு தொகை பணமும் தரகு பணமாக கிடைக்கும்.
இலங்கை மத்திய வங்கி தடை.
இவ்வாறான வர்த்தக முறைமையை இலங்கை மத்திய வங்கி தடைசெய்துள்ளது. இந்நிலையில் குளோபல் லைப் ஸ்ரைல் லங்கா எனும் நிறுவனம் இந்த முறைமையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் பல பொதுமக்கள் பாதிக்கபட்டு , பல இலட்ச ரூபாய் பணத்தினையும் இழந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குறித்த நிறுவனம் சாவகச்சேரி பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கையை மேலும் விரிவு படுத்தும் நோக்குடன் , கூட்டங்களை நடத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்த போது , பாதிக்கப்பட்டவர்கள் கூட்டங்களை ஏற்பட்டு செய்யவர்களுடன் முரண்பட்டு உள்ளனர். அதனால் குழப்பங்களும் ஏற்பட்டு இருந்தன.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்.
குழப்பங்கள் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த சாவகச்சேரி பொலிசார் குழபத்தினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அது தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தார்.
நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உத்தரவு.
அத்துடன் நிதிகுற்ற புலனாய்வு பிரிவினருக்கு குறித்த நிறுவனத்தின் பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கவும் பணித்தார்.
மத்திய வங்கி ஆளூனருக்கு நடவடிக்கைக்கு பணிப்பு
மேலும் து தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனருக்கு அறிவித்து நிறுவனம் தொடர்பிலான நடவடிக்கைகளை உடனடியாக கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பிலான கடிதத்தினை நீதிமன்று பதிவாளர் காலதாமதமின்றி அனுப்பி வைக்குமாறும் பணித்தார்.

வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிப்பு.
அத்துடன் இது தொடர்பில் , வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் க்கு அறிவிக்குமாறு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்தார்.
பத்திரிக்கை ஊடாக தெரியபடுத்தவும்.
மேலும் மக்கள் இந்த வியாபர நடவடிக்கையால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக இந்த நீதிமன்ற கட்டளையை பத்திரிகைகளில் பொலிசார் அறிய கொடுத்து மக்கள் பாதிக்கபடுவதை தடுத்து மக்களை அதில் இருந்து காப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஆதரவு நல்கியவர்களையும் சந்தேகநபர்களாக இணைக்க உத்தரவு.
அத்துடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் , கூட்டங்களை நடத்த ஒழுங்குகளை செய்து கொடுத்தவர்கள் , மண்டபங்களை கொடுத்தவர்கள் ஆகியோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் தேவை ஏற்படின் அவர்களையும் இந்த வழக்கின் சந்தேக நபர்களாக இணைத்து கொள்ளவும் என பொலிசாருக்கு நீதிபதி பணித்தார்.
விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க உத்தரவு.
மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கையால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க மக்கள் மத்தியில் குறித்த நிறுவனம் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக இந்த நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரதேச செயலர் முன்னிலையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க நீதிபதி பணித்தார்.
நிறுவனத்திற்கு கடுமையான எச்சரிக்கை.
அத்துடன் குறித்த நிறுவனத்தினர் மக்களை கஷ்டத்திற்குள் தள்ளும் இந்த வர்த்தக நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் மேற்கொண்டும் இவ்வாறான வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது எனவும் நீதிபதி கடுமையாக எச்சரித்திருந்தார்.

 

குறித்த நிறுவனத்தில் பிரமிட் மோசடி தொடர்பாக வாகீசம் புலனாய்வு செய்து முன்னர் வெளியிட்டிருந்த கட்டுரைகள்

இணைக்கப்பட்டுள்ளது.

வடக்கை அச்சுறுத்தும் மோசடி வியாபரம் – விழிப்படையுங்கள் – நம்பி ஏமாறாதிர்கள் (பாகம் 01)

 

வடக்கில் சிதைக்கப்படும் நிதிக் கட்டமைப்பு – மிரமிட் கட்டமைப்பிற்குள் நுளைந்து நடத்தப்பட்ட ஒரு வேட்டை (பாகம் 2)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com