சற்று முன்
Home / செய்திகள் / பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து கண்டறிந்து அவற்றிற்கு தீர்வுகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்குமாறு மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த இந்தக் குழுவினர் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பிரதேச ஊடகவியலாளர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகள் குறித்து இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஊடகவியல் துறையில் அவர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் 6 வது பிரதிநிதிகள் மாநாட்டில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்தே பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மூன்று மாதக் காலப்பகுதியில் அதன் அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் ஷிரானி விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, நிதி, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர, ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கருணாரத்ன கமகே, தலைமை செயலாளர் தர்மசிறி லங்காபேலி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com