சற்று முன்
Home / செய்திகள் / பிரதமர் – இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு!

பிரதமர் – இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் சுஹாக்கும் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
ஐந்து நாள் உத்தியோகபூர்வமாக இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவத் தளபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் போது இரு நாட்டு பரஸ்பர நட்புறவு மற்றும்  சுமூகமான உறவுகள் தொடர்பில் நினைவு கூர்ந்தனர்.
நாட்டின் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில் வருகை தந்த டல்பீர் சிங் சுஹா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி, மற்றும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரையும் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com