சற்று முன்
Home / Uncategorized / பிஎம்டபிள்யூ – டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக்!

பிஎம்டபிள்யூ – டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக்!

ந்திய பைக் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக், G310R அறிமுகமாகியுள்ளது. இந்த பைக், ஜெர்மனியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, டிவிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட இருக்கிறது.

2016-ம் ஆண்டு மத்தியில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்காக G310R விற்பனைக்கு வரும். அதன் பிறகு, டிவிஎஸ் நிறுவனம் இதே பைக்கின் பிளாட்ஃபார்மில், இந்தியச் சந்தைக்கு ஏற்ற இன்னொரு பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், புதிய அப்பாச்சியுடன் இந்த பைக்கை டிவிஎஸ் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
காம்பேக்ட் ஸ்ட்ரீட் பைக்கான G310R ஸ்டைலிங், மினிமலிஸ்டிக்காக உள்ளது. பாடி பேனல்கள் ஓவர் ஸ்டைலாக இல்லாமல், சிம்பிளாக உள்ளன. 11 லிட்டர் ஃப்யூல் டேங்க்கில் பிஎம்டபிள்யூ பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.
முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ஓடோ மீட்டர், கியர் இண்டிகேட்டர், இன்ஜின் டெம்பரேச்சர் மீட்டர், ஃப்யூல் லெவல், கடிகாரம் ஆகியவை உள்ளன.
இருக்கையின் உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். டெயில் ஃபேரிங், செம ஸ்லிம். பின்பக்க மட்கார்டு மிகவும் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் நிறைய அலாய் பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ பைக் என்பதால், ஒட்டுமொத்தத் தரம் மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
G310R பைக்கில் உள்ள லிக்விட் கூல்டு இன்ஜினின் ஹெட், 180 டிகிரி திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சின்ன வீல்பேஸிலேயே நீளமான ஸ்விங்-ஆர்ம் செட்-அப் செய்ய முடிந்துள்ளது. ஷார்ட்-ஸ்ட்ரோக் இன்ஜின் என்பதால், வேகமாக ரெவ் ஆகும் என எதிர்பார்க்கலாம். ஃப்யூல் இன்ஜெக்‌ஷன்கொண்ட இந்த இன்ஜின் 10,500 ஆர்பிஎம்-ல் 33.6bhp சக்தியை அளிக்கிறது. இது, கே.டி.எம் 390 பைக்கைவிட 10bhp குறைவு. 7,500 ஆர்பிஎம்-ல் 2.9kgm டார்க்கை அளிக்கிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இதன் டாப் ஸ்பீடு, மணிக்கு 145 கி.மீ; மைலேஜ் லிட்டருக்கு 30 கி.மீ! ரேடியேட்டர் அளவும் பெரிது.
G310R பைக்கின் எடை 158 கிலோ. முன்பக்கம் 41 மிமீ அப்-சைடு டவுன் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன்; பின்பக்கம் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளன. 17 இன்ச் வீல்கள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட, 150/60 செக்‌ஷன் டயர்கள் அளிக்கப்படுகின்றன. முன் பக்கம் 300 மிமீ ரோட்டார் 4-பிஸ்டன் காலிபர் டிஸ்க் பிரேக். பின் பக்கம் 240 மிமீ டிஸ்க். ட்வின் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது.
கேடிஎம் டியூக் பைக்குகளுடன் போட்டியிட உள்ள G310R, சொகுசிலும் ஓட்டுதல் தரத்திலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மாஸ் செக்மென்ட்டில் பிஎம்டபிள்யூ G310R களை கட்டுமா? இன்னும் சில மாதங்கள் காத்திருந்து பார்க்கலாம்!

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com