சற்று முன்
Home / செய்திகள் / ”பாடும் பறவைகள் வாருங்கள் புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்”

”பாடும் பறவைகள் வாருங்கள் புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்”

“பாடும் பறவைகள் வாருங்கள் புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்” இந்தப் பாடல் ஒலிக்கும்போது அனைவர் கண்களும் பனித்துப் போய்விடுகிறது. எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப்போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். என தனது இறுதி உரையில் கூறுகின்றான் காந்திய தேசத்திற்கு அகிம்சையை கற்பித்த பார்த்தீபன்….

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…! சுதந்திர தமிழீழம் மலரட்டும்…!! என முழக்கமிட்டு நல்லூரில் உண்ணா நோன்பில் இருந்தான் அந்த மாவீரன்.

1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 15. 09.1987 தொடக்கம் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்.பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப் போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக் கொண்ட வேளையில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

ஈழத் தமிழ் மக்கள் சார்பிலான கோரிக்கைகளை 13-09- 1987 அன்று இந்தியா உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள் ஆனால் 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண் ணாவிரதமும் மறியல் போராட்ட மும் நடத்துவதேயென தமிழீழ விடு தலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது.

1.பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3.இடைக்கால அரசு நிறுவப் படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4.வடக்கு – கிழக்கு மாகாணங் களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும் பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.
வல்லாதிக்க அரசுகளின் மௌனத்தால் பதினொரு நாட்கள் பார்த்தீபனின் வேட்கை தொடர்ந் தது, பதினோராவது நாள் உயிரு டன் இருக்கிறாரா இறந்து விட் டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் தோழர். திலீபன் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது.

“ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்ற பாடல் ஒலிக்கிறது அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.
அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது. தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 இற்கு வீர மரணம் அடைந்தான்.

அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது. திலீபனின் மரணம் மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் உலகுக்கு உணர்த்தியது.
என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார் பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழ வைத்துக் கொண்டுள்ளது. நான் நேசி த்த தமிழீழ மண் ணில் வாழ் கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலை வன் பிரபாகரன் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரண மாகக்கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப்போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். என தனது இறுதி உரையில் கூறுகின்றான் காந்திய தேசத்திற்கு அகிம்சையை கற்பி த்த பார்த்தீபன்.

அவன் வார்த்தைகள் இன்றும் உலகை சுடுகின்றன. தனது இனத்துக்கு நீதி வேண்டி பன்னிரண்டு நாட்கள் உணவின்றி உயிர் துறந்துள்ளான். இந்த மாபெரும் தியாகம் வேறு எங்காவது இந்த உலகின் மூலையில் நடந்துள்ளதோ? சற்று நில் தமிழினமே உனது வரலாற்றை உன் பெருமையை அறிந்து செல்! எங்களிலும் இப் படியொருவன் இருந்துள்ளான். நாங்கள் திலீபனின் பரம்பரை. இளைஞர் சமுதாயமே உன்வயதில் தான் அவனும் உயிர் துறந்தான். இதை உணர்ந்து செயற்படு. திலீபன் மட்டுமல்ல ஆயிரமா யிரம் போராளிகள் உனக்காக உயிர் துறந்து கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.

(நன்றி – வலம்புரி)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com