சற்று முன்
Home / செய்திகள் / பல்கலை மாணவர் படுகொலை –  தகவல்களை மூடிமறைக்க பொலிஸ் அதிகாரிகள் முயற்சி !

பல்கலை மாணவர் படுகொலை –  தகவல்களை மூடிமறைக்க பொலிஸ் அதிகாரிகள் முயற்சி !


யாழ்.பல்கலை மாணவர் கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபர் சம்பவம் நடந்த உடனேயே அது தொடர்பில் தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவ்விடையம் தனது குறிப்புப் புத்தகத்தில் உள்ளது என்றும் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலே பிழையான தகவல்கள் வழங்கப்பட்டன என்ற விவாகாரம் சூடுபிடித்துள்ளது.

அது தொடர்பில் நான் கேள்வி எழுப்பியுள்ளேன் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். குறித்த வழக்கு மீதான விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவுப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியங்களை அச்சுறுத்தியதான முறைப்பாடு குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று அறிக்கைச் சமர்ப்பிக்காமல், இது ஒழுக்காற்று நடவடிக்கை என்றும், அப்படியான விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்று அனுமதியளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனை மறுத்த நீதிபதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் சந்தேக நபர்களின் விளக்கமறியலை யூலை 11 வரை நீடிப்புச் செய்து உத்தரவிட்டுள்ளார

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com