சற்று முன்
Home / கட்டுரைகள் / “பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை

“பறை சாவுக்கு அல்ல, வாழ்வியலுக்கு” – சொல் ஆவணப்படம் குறித்த பார்வை

பறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். சிவப்பு துணியால் மறைந்துள்ள கொடூர கலாசாரத்தின் அரசியலை இது நொறுக்குகிறது.

வேதர் காலத்தில் வர்ணம் என்ற அடிப்படையில் மக்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அது அவர்கள் செய்யும் தொழில்களுக்கமைய. அனால் அப்போது தங்கள் செய்யும் தொழிலை எந்தவொரு நேரத்திலும் மாற்றிக்கொள்ளும் சுகந்திரம் மக்களுக்கு இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அக் காலத்தின் இரண்டாவது கால கட்டத்தில், ஒருவர் முன்னய காலத்திலிருந்தே செய்துகொண்டுவரும் வேலைகளை மாற்றிக்கொள்ள இயலாது என நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த இரண்டாம் காலப்பகுதியில் நிலைமையானது இன்னொரு கட்டமாக தொடர்ந்தது சாதி எனும் பேர்சூட்டியதில் தான்.

அதற்கும் ஒரு மடங்கு மேல் சென்ற இந்த சாதி முறையால் சில தொழில்களுடன் இணைந்த சாதிகள் உயர்ந்த சாதிகள் எனவும், மற்றைய தொழில்களுடன் இணைந்த சாதிகள் கீழ் சாதிகள் எனவும் பெயர்சூட்டியது. இதனால் சாதியுடன் இணைந்த வன்முறைகள் நடக்கும் அளவிற்கு அது நீடித்தது.
இதில் இன்னுமொரு கட்டமாக சாதிகளின் அடிப்படையில் கலைகளும் பிரிக்கப்பட்டது காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக: நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் ஒரு சாதியை சேர்ந்த மக்கள் எனவும், பறையை வாசிக்கும் கலைஞர்கள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் எனவும் சமூகத்தால் கலைஞர்களை அல்லது மனிதர்களை பிரித்தனர்.

இதில் இன்னுமொரு கட்டமாக ஒவ்வொரு கலையும் அந்த அந்த சாதியைச் சேர்ந்தவர்களால் மட்டும் தான் செய்ய வேண்டும். அந்த கலையோ அல்லது வேலையோ செய்ய வேண்டியது அவர்கள் தான் எனவும் தெளிவுப்படுத்திக்கொண்டனர்.
அதில் இன்னொரு முகமாக கலைகளிலதும், இந்த கலைகள் மேல் கலைகள், இந்த கலைகள் கீழ் கலைகள் என பிரித்துக்கொண்டனர்.

சமூகப்பார்வையில், பறை (சிங்களத்தில் “தப்புவ”) என்பது கீழ் சாதியை சேர்ந்த கலை என்றும், அது வெட்டியான் சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இந்த கலையை தொடருவதாகவும் கருதுகிறார்கள். “ இந்த கலையை முன்னெடுத்து செல்ல வேண்டியது அந்த மக்கள் தான். அவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். இது சாவுக்கு மட்டும் தான் அடிக்கிறது. இவ்வாறான கீழ் மட்டத்தில் தான் சமூகத்தின் பார்வையானது தங்கியுள்ளது.
உண்மையில் பரதம், கர்நாடக இசை போற்ற கலைகளும் இவ்வாறான ஒதுக்கப்பட்ட மக்களுக்கிடையில் இருந்ததாகவும், பின்னர் இவ்வாறான கலைகளை அந்த மக்களிடமிருந்து பெரும்பான்மையினரால் பறிக்கப்பட்டதெனவும், பலவந்தமாக பறித்துக்கொண்ட அவ்வாறான கலைகள் அவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் எனவும், அது உயர் சாதிகளின் கலையாக ஸ்தாபனம் செய்ததாகவும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

எல்லோரும் அறிந்திருக்கு பறை வாசிப்பது சாவுக்கு மட்டுமில்லாத, திருமண வீட்டிற்கு, பிறந்த வீட்டிற்கு, கோவிலுக்கு, குறிப்பாக போராட்டங்களின்போது ஆரம்ப நிகழ்வாக பறை வாசிப்பது இடம்பெறுகின்றது என உண்மையை, தெளிவுப்படுத்தலை எங்கள் முன் முன்வைப்பது “புத்தர் கலைக் குழுவினர்”. அது “சொல்” ஆவணப்படத்தினூடாக.

“சொல்” ஆவணப்படத்தை செந்தில் குமரன் அவர்கள் இயக்கியிருக்கிறார். அது A. மணிமாறன், மகிழினி மற்றும் ஜீவா கிரிதரன் உட்பட கலைக் குழுவின் ஒத்துழைப்புடன். 


பறையை வாசிப்பது பறையர்கள் எனும் சாதியர்கள் என்று சமூகத்தில் வாழும் மூளையுள்ளோர் கேலி செய்கிறார்கள். மனிதநேயம் இறந்து விட்ட சமூகத்தை இதனூடாக பார்க்க எங்களை அலைகிறார்கள் “புத்தர் கலைக் குழு”.

கோவில்களுக்கு பறை இசை தேவையாக உள்ளது. அந்த கடவுளுக்கு பறை இசை தேவை என நினைக்கிறார்கள். ஆனால் அந்த இசையை வழங்கும் மனிதக் கால்களுக்கு கோவிலில் இடம் இல்லை. அந்த கடவுளை பார்க்க அந்த மக்களின் கண்களுக்கு சுகந்திரமில்லை இந்த சுகந்திரமடைந்த நாடுகளில். இவ்வாறான சமூக அவசியலை இந்த “சொல்” ஆவணப்படம் முன்வைக்கிறது.
அனைத்து நாடுகளுக்கும் பொது சட்டமொன்று உள்ளது. அந்த சட்டங்களுக்கு சமூகம் தலைவணங்க வேண்டும் எனவும் கூறுகின்றது. அந்த பொது சட்டத்திளையும் சாதிகளுக்கென சட்டங்கள் உள்ளன. இப்போ ஒரு கேள்வி.. ஆனால் இந்த சட்டங்களின் மூலம் மக்களுக்கு பெற்றுதருகின்ற நியாயம் என்ன?

இந்த “சொல்” ஆவணப்படத்தில் பிரதான உள்ளடக்கமாக பறை தொடர்பான மக்களின் வாழ்வியலும், சமூகத்தால் அவர்களை நிக்கவைத்திருக்கும் இடத்தைப் பற்றியும் தெளிவுப்படுத்துகிறது. அதற்கு அப்பால் பறை என்கிற கலையும், அது பொது கலை அம்சமாக மாறவேண்டும் எனவும், உலகத்தில் பல்வேறு நாடுகளில் (அமேரிக்கா, லண்டன், கெனடா போன்ற நாடுகளில்) கலை விழாக்களில் பிரதான கலை அம்சமாக நிகழ்வதுமான பலவகையான அறிவியலை எமக்கு தருகிறது.

அத்துடன் இந்த ஆவணப்படமானது ஒரு பக்கத்தில் பறையோடு கலந்த வாழ்வியலும் இன்னொரு கோணத்தில் இந்த கலைஞர்கள் சமூகத்தால் எதிர்கொள்ளும் கொடுமையும் நன்கு விவரிக்கிறது. அது இலங்கைக்கும், இந்தியாவுக்குமென உள்ள நிலைகளை கூறுகிறது. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டகளப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு போற்ற மாவட்டங்களிலும், இந்தியாவில் கோவை மற்றும் தமிழகத்திலுள்ள பல் வேறு இடங்களிலும் உள்ள அவலத்தை கண் முன்னால் நிறுத்துகிறது. அதிலுள்ள அடிமட்டத்தை ஸ்பரிசிக்கிறது.

இலங்கையில், ஒரு ஆலயத்தில் குருக்கள் ஒருவர் “அந்த மக்களுக்கு கோவிலின் உள்ளே போக அனுமதி இல்லை” என கூறுகிறார். இந்த ஆவணப்படம் கடந்த 13 ஆம் திகதி, கொழும்பு,தேசிய கலை இலக்கிய பேரவையில் காட்சிப்படுத்தினார்கள். அதன்போது ஆவணப்படத்தின் இயக்குனர் “இந்த குருக்கள் ஐயா சொன்னதை, இந்தியாவில் உள்ள குருக்கள் ஒருவர் சொல்லி இருந்தால், கேஸ் இல்லாமல் ஜெயிலுக்கு போய் இருக்கலாம்” என கூறினார். 


 சில சட்டங்களினால் மக்களுக்கு சம உரிமையை வழங்கும் என உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. சாதி தொடர்பான சட்டங்களும் அவ்வாறே. ஆனால், அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதற்கு இதை விட என்ன உதாரணம் வேண்டும்? சட்டங்கள் நூல்களில் பக்க பக்கமாக எழுதியுள்ளன. ஆனபோதும் அந்த சட்டங்களை சமூக சட்டத்தால் உடைத்து, வீசி எரியும் உண்மையை “சொல்” லால் புரிந்துக்கொள்ள முடியும்.

அத்துடன் இந்தியாவில் இந்த பறை கலைஞர்களை ஆக மோசமாக இல்லையெனில் தாழ்ந்த மக்களாக நடாத்துவதை இதனூடாக காணமுடிகிறது. அரிசி அளவெடுக்கும் சுண்டால் தண்ணீர் தருவதும்… செத்தவீடுகளுக்கு மது அறிந்து வரும் நாகரீகம் கொண்ட மக்கள் இந்த கலஞர்களை தவறான வார்த்தைகளால் பேசுவதும், வாசிப்பை விமர்சித்து அடிப்பதும்… இந்த அனைத்தையும் தாங்கிக்கொண்டு இந்த கலையை அல்லது வேலையை செய்வது, வாழ்வதற்காக வேறு வலி ஏதும் இல்லாதனால் என இந்தியாவில் ஒரு கலைஞர் கூறுகிறார்.

அனைத்தையும் பிரித்தெடுத்த மனிதன் கலையைக் கூட விட்டு வைக்காத கொடூரத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இலங்கையிலும் இந்த பறை கலையை தொடரும் மாணவர்களையும், கலைஞர்களையும் தாழ்த்தி பேசுவது, அவர்கள் கீழ் சாதி என அவர்கள் மீது சமூக கொடூரத்தை செலுத்துவதும் இந்தியாவில் உள்ள “புத்தர் கலை குழு” ஆவணப்படுத்துகிறது. இலங்கையர்களுக்கும் அவரவரின் பின்தங்கிய மனநிலையின் நாற்றத்தை எதனூடாக சிந்திக்க வைக்கிறது.

பறையை செத்த வீட்டில் வாசிக்கும்போது, பறையை நிர்வாணமாகவும், கோவிலில் வாசிக்கும்போது சிவப்பு துணியால் நிருவாணத்தை மறைந்துக்கொள்ளும் கலாசார வன்முறையை மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த “சொல்” ஆவணப்படம். சிவப்பு துணியால் மறைந்துள்ள கொடூர கலாசாரத்தின் அரசியலை நொறுக்குகிறது.

இவர்கள் இந்த ஆவணப்படத்தின் இரண்டாவது கட்டமாக இலங்கையில் சிங்கள சமூகத்திலும் வாழும் பறை கலஞர்களைப் பற்றியும் பறையுடன் இணைந்த அவர்களின் வாழ்வியலைப் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் உச்சக்கட்டத்திலுள்ள அரசியலையும் அதன் சோகத்தையும் கதைபதற்கு முன்னர், எங்கள் சமூகங்களின் மூலையில் பாயிபோட்டு உறங்கியிருக்கும் சாதி போன்ற பின்தங்கிய எண்ணங்களை பற்றி ஆழமாக உரையாடுவதற்கு படைப்புகள் கூட உருவாக மறுக்கும் இந்த வேலையில் இந்தியாவில் இருக்கும் இந்த நபர்கள் இந்தியாவிலும் மற்றும் இலங்கையிலும் நடைமுறையில் உள்ள சமூக, கலாசார அரசியலை அல்லது பின்தங்கிய எண்ணங்களை ஆழமாக ஆவணப்படுத்தியுள்ளனர்.


 “ சொல்” நம் இரண்டு நாடுகளுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு அறை.   அனுஷா சிவலிங்கம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com