சற்று முன்
Home / செய்திகள் / நெடுங்கேணியில் காணாமல்போன இளைஞன் நண்பர்களால் கழுத்தறுத்துக் கொலை – சடலமும் எரிப்பு

நெடுங்கேணியில் காணாமல்போன இளைஞன் நண்பர்களால் கழுத்தறுத்துக் கொலை – சடலமும் எரிப்பு

நெடுங்கேணியில் ஏமாற்றி அழைத்துச் சென்று மது அருந்த வைத்து நண்பர்கள் இணைந்து கழுத்தறுத்துக் கொலை செய்து தலைமறைவான இருவர் மதுபோதையின் உளரால் நெடுங்கேணிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் .

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி நைனாமடுவைச் சேர்ந்த தேவராசன் – கயமுகன் வயது 22 என்பர் கடந்த 2018-04-17 அன்று காணாமல்போயுள்ளார். அவ்வாறு காணாமல் போனவர் நண்பர்களுடன் சென்றிருக்கலாம் எனவும் அல்லது திருமண முறையில் சென்றிருப்பாரோ என சந்தேகம் கொண்ட தாயார் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார். இருப்பினும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சில நாட்களின் பின்னர் கயமுகனின் மோட்டார் சைக்கிள் மட்டும் நெடுங்கேணிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்பும் தேடுதல் தொடர்ந்துள்ளது. இறுதியில் தாயார். கடந்த 2018-05-28 அன்று கிராம சேவகரிடம் சென்று முறையிட்டுள்ளார். அதனை அடுத்து கிராமசேவகர் ஓர் கடிதம் வழங்கி உடனடியாகச் சென்று பொலிசாரிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் பிரகாரம் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அவ் முறைப்பாட்டையடுத்து செயல்பட்ட பொலிசார் ஆரம்பத்தில் சாதாரணமாகத் தேடுதலில் ஈடுபட்டபோதும் எந்த தடயமும் இல்லாத காரணத்தினால் பலத்த சந்தேகம்பொண்டனர். இதனால் விசாரணையை முடக்கிவிட்டதோடு கயமுகனின் நண்பரகள் பகைவர்கள் என பொலிசார் வலை விரித்தனர். இதன்போது இரு மாதங்களின் முன்னர் மதுபோதையில் ஒருவர் குறித்த கயமுகனை கொன்றே தீர வேண்டும். என உளறிய விடயமும் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களை பொலிசார் தேடிச் சென்றதும் இருவரும் தலைமறைவாகினர் . இதனால் பொலிசாரின் சந்தேகம் மேலும் வலுவானது.

இதனையடுத்து தேடுதல் தீவரமடைந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா மன்றில் முற்படுத்தப்பட்டவேளையில் இருவரும் குற்றத்தை மறுத்தபோதும்விளக்க மறியளில் வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும்இருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்த பொலிசார் பல கோணத்தில் மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்த சில கூற்றுக்களின் அடிப்படையில் மாட்டிக்கொண்டனர் இருவரும். அதன் பிரகாரம் நைனாமடுவில் இருந்து கயமுகனுடன் மதன் , சிவகுமார் என மூவரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான ஒதியமலையை அண்டியபகுதியில் தண்ணிமுறிப்பு அலைகரையை அண்டிய பகுதியில் ஓர் இடத்தில் மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

மது அருந்தலின் ஆரம்பத்திலேயே கயமுகனை கொலை செய்வதாக திட்டம் இருந்தமையினால் ஏனைய இருவரும் சற்றுக் குறைவான மது அருந்திய நிலையில் கயமுகன் மதுவின் உச்சத்திற்கு சென்ற சமயம் இருவரில் ஒருவர் கயமுகனின் தலையை பிடிக்க இரண்டாம் நபர் கழுத்தை அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்நவரை அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தீயிட்டுக்கொழுத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவித்து உரிய இடத்தினையும் சந்தேக நபர்களே அடையாளம் கான்பித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரு சந்தேக நபர்களும் 26 ,27 வயதுடையவர்கள் .

இவ்வாறு வவுனியா நீதிமன்றத்தில் நெடுங்கேணிப் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காணாமல்போனவரின் உடலம் எனக் கருதப்படும் எரிந்த நிலையிலான எச்சம் முல்லைத்தீவு மாவட்டத்தினில் மீட்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com