சற்று முன்
Home / செய்திகள் / நீர்வேலியில் மூன்று வீடுகளில் கொள்ளை – திருட்டு நகையை அடகு வைக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

நீர்வேலியில் மூன்று வீடுகளில் கொள்ளை – திருட்டு நகையை அடகு வைக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது.
இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றொரு வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் கொள்ளையிடப்பட்டதுடன் மூன்றாவது வீட்டில் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டது.

முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கரின் கீழான மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழாலையைச் சேர்ந்த ஒருவர் ( அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளதால் பெயர் தவிர்க்கப்படுகிறது) மாவட்ட புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் மற்றொரு குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன், கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரிடமிருந்து கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 5 பேரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் 5 பேரும் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com