சற்று முன்
Home / செய்திகள் / நீரை பருகலாமா ? பருக கூடாதா ?

நீரை பருகலாமா ? பருக கூடாதா ?

யாழ். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலத்தடி நீரில்  கழிவோயில் கலக்க பட்டமையால்  அந்த  நீரை  பருகலாமா ? கூடாதா ? என மத்திய மற்றும் மாகாண அரசுகள் தமக்கு தெளிவாக கூறவேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்து இருந்தனர்.


சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னாக சந்தைக்கு அருகில் இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில்கள் நிலத்தடி நீரில் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண சபையினால் நிபுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டு நீர் ஆய்வு செய்யப்பட்டது. 

அந்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. வெளியிட்ட அறிக்கையில் சுண்ணாகம் நிலத்தடி நீரில் ஒயில் பதார்த்தம் மற்றும் பாதகம் விளைவிக்கும் பதார்த்தங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த நீரினை மக்கள்  பருகலாமா என தெரிவிக்கப்படவில்லை

எனவே, குறித்த நீரை குடிக்க பயன்படுத்தலாமா அல்லது இல்லையா  என்பது தொடர்பில், தமக்கு தெளிவாக கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே, குறித்த கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டு இருந்தது.



About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com