சற்று முன்
Home / செய்திகள் / நீதிமன்ற அவமதிப்பு விக்கியை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு விக்கியை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகினர்.

இதன்போதே நீதிவான் முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

About Sujitha Thurairajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com