சற்று முன்
Home / செய்திகள் / நிதிக்குற்றப் பிரிவில் முறையிடுவேன் முதலமைச்சர் எச்சரிக்கை ?

நிதிக்குற்றப் பிரிவில் முறையிடுவேன் முதலமைச்சர் எச்சரிக்கை ?

அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் தான் நியமிக்கும் விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க முன்வராவிட்டாலும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தேவைப்பட்டால் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடுவேன் என்றும் தெரிவித்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு சட்டபூர்வமாற்ற குழு என்றும் எனவே தாங்கள் முதலமைச்சர் நியமிக்கும் விசாரணைக் குழுமுன் சாட்சியமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவுக்குழு அமைத்தால் மட்டுமே செல்வோம் எனவும் இரு அமைச்சர்களும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
இன்று மாலை முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். அதன்போது தான் குறித்தவிடையத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். அதன்போது குறிப்பிட்ட முதலமைச்சர்.
அவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கு எதிரான விசாரணை நடைபெறும். சாட்சியங்கள் பதிவுசெய்யப்படும். அதற்கு ஏற்றவாறு நான் நடவடிக்கை எடுப்பேன். அதைமீறிதேவை ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவினரிடம் முறையிடுவேன் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com