சற்று முன்
Home / செய்திகள் / நாய்க்குக் கூட கொடுக்க முடியாத உணவு தந்தனர் – மைத்திரி ஆதங்கம்

நாய்க்குக் கூட கொடுக்க முடியாத உணவு தந்தனர் – மைத்திரி ஆதங்கம்

நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.

அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.

மனிதர்களால் சாப்பிட முடியாத- நாய் கூடத் தின்னாத, இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் இந்த தரம்குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com