சற்று முன்
Home / செய்திகள் / நான் தான் தலைவர் – பிரபாகரன் தலைவரல்ல – அதிபர்களுக்கு வகுப்பெடுத்த கல்விப் பணிப்பாளர்

நான் தான் தலைவர் – பிரபாகரன் தலைவரல்ல – அதிபர்களுக்கு வகுப்பெடுத்த கல்விப் பணிப்பாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் என யாழ்ப்பாணத்தில் அதிபர்களுக்கு வகுப்பெடுத்திருக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள கல்வி வலயம் ஒன்றின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தான் தன்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் (மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து) காப்பாற்றிவருவதால் தன்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் என்றும் அதிபர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் அதிபர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வு ஒன்றில் பங்கேற்று அதிபர்களுக்கு வகுப்பெடுத்தபோதே குறித்த பணிப்பாளர் இவ்வாறு கூறியதாக அதிபர்கள் சிலர் சினத்துடன் எமக்குத் தெரிவித்துள்ளனர்.

அதிபர்களுக்கான குறித்த செயலமர்வு ஆரம்பமான போது யார் தலைவர் என்று கூறுங்கள் என்று அதிபர்களைப் பார்த்து அவர் கேட்டிருக்கிறார். அதன் போது பல அதிபர்கள் தலைவர் என்றால் பிரபாகரன் என்றும் ஏனைய அதிபர்கள் தலைவருக்கான பண்புகளையும் கூறியிருக்கின்றனர்.

அதன்போது குறுக்கிட்டுப் பேசிய அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் நான் என்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் என்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் எனக் கூறியிருக்கிறார்.

அவரது பேச்சால் பல அதிபர்கள் சினமடைந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் தொடர்ந்து வகுப்பு நடத்திய அவர் தவறு செய்யாதவர்கள் என்று இல்லை. நீங்கள் தவறு செய்வதானால் தவறு ஏற்படாதவாறு தவறு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com