சற்று முன்
Home / செய்திகள் / நாட்டை விட்டு வெளியேறுகிறாரா விஜயகலா மகேஸ்வரன் ??

நாட்டை விட்டு வெளியேறுகிறாரா விஜயகலா மகேஸ்வரன் ??

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தனது பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு சென்று குடியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய அவர் எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற அவரது கருத்தினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

விஜயகலாவின் சர்ச்சை கருத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் பரப்புரைச் செயலர் துசார திசநாயக்க, இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

ஏனென்றால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றால், விசாரணைகளுக்குத் தடையாக அமையும்.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரனின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி ரத்துச் செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com