சற்று முன்
Home / Uncategorized / நாட்டில் 24.6 சதவீதமானோரிடம் கணினி

நாட்டில் 24.6 சதவீதமானோரிடம் கணினி

நாட்டில் 24.6 சதவீத குடித்தனங்கள் ஒரு மேசைக் கணினி அல்லது மடிக்கணினியைக் கொண்டிருப்பதுடன் 67 சதவீதமான குடித்தனங்கள் கடந்த ஐந்தாண்டினுள் (2010 – 2014) தமது முதலாவது கணினியை கொள்வனவு செய்துள்ளனர் என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சத்தரசிங்க தெரிவித்துள்ளார்.

கணினி அறிவு அளவீடு 2015 இனை அடிப்படையாகக் கொண்டு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட 2015 இன் முதல் அரையாண்டுக்குரிய; வயது 5 – 69 இற்கு இடைப்பட்ட நபர்களின் கணினி அறிவு மற்றும் குடித்தனங்களின் பண்புகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருடம் பூராகவும் நடாத்தப்படும் இம்மாதிரி அளவீடானது 25,000 குடித்தனங்களில் தொடர்ச்சியக 12 மாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.

கணினியைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் ஆற்றல் “கணினி அறிவு” என வரையறுக்கப்படுகிறது. ஆண்களின் கணினி அறிவானது (28.7%), பெண்களின் கணினி அறிவைவிட (25.7%) அதிகமாகக் காணப்படுகிறது. மாகாணங்களுக்கிடையே உச்ச மட்ட கணினி அறிவு மேல் மாகாணத்தில் (38.3%) காணப்படுவதுடன் குறைந்தளவானது (12.8%) கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளது. மாவட்டங்களை ஒப்பிடுகையில், அதி உயர்ந்தளவு கணினி அறிவாகிய 47.1% கொழும்பு மாவட்டத்திலும், குறைந்தளவு 8.9% ஆனது முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுகிறது. கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களின் கணினி அறிவானது 30% இலும் அதிகமாக காணப்படுகிறது.

வயதடிப்படையில் நோக்குகையில் கணினி அறிவு வீதத்தில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இளவயதினரின் (வயது 15 – 19) கணினி அறிவு வீதமானது அதிகூடிய அளவான 57.2% ஆகக் காணப்படுகிறது. இணையத்தளப் பாவனை (27.6%) மற்றும் மின்னஞ்சல் பாவனை (21.2%) கொழும்பில் அதிகமாகக் காணப்படுகிறது. வேலையற்றோரில் 20 – 24 வயதுடைய சனத்தொகையினரின் கணினி அறிவு வீதமானது 69.1 சதவீதமாகக் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆயுதம் மேல் நம்பிக்கையுள்ளோர் வாக்களிக்காதீர்கள்!

நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com