சற்று முன்
Home / செய்திகள் / நாடு ழுழுவதும் ஊரடங்கு சட்ட நடைமுறை – வெளியாகியது புதிய அறிவித்தல்

நாடு ழுழுவதும் ஊரடங்கு சட்ட நடைமுறை – வெளியாகியது புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை, மே 11 திங்கள் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரைிவினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை, மே 11 திங்கள் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நாளை, மே 11 திங்கள் ஆரம்பமாகும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதற்கான நிபந்தனைகளில் மாற்றங்கள் இல்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com