சற்று முன்
Home / செய்திகள் / ”நாங்கள் உயிருடன் நிம்மதியாய் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்” – அமைச்சர் விஜயகலா யாழில் பேச்சு

”நாங்கள் உயிருடன் நிம்மதியாய் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்” – அமைச்சர் விஜயகலா யாழில் பேச்சு

“நாங்கள் உயிருடன் வாழவேண்டுமானால் நாங்கள் நிம்மதியுடன் வீதிகளில் நடக்கவேண்டுமானால்எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்பவேண்டுமானால் வடக்கு கிழக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும்” என்று தெரிவித்திருக்கும் மகளிர் விகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவேண்டும் என்பது எங்களுடைய முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஐனாதிபதியின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையிலே இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவரின் இந்தக் கருத்துக்களைக் கேட்டபோது, மண்டபத்திலிருந்த கிராம அலுவலகர்கள், அதிகாரிகள் என அமைவரும் கைதட்டி ஓசை எழுப்பினர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

30 வருடங்களாக நாம் போருக்கு முகம் கொடுத்துள்ளோம். கடந்த 3 வருடங்களாக அபிவிருத்தியைச் செய்தார்கள். வேலைவாய்ப்புக்கைளை வழங்கினார்கள். எங்களுடைய காணிகளை விடுவித்ததற்காக இந்த அரசுக்கு நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எமது இளையோர்கள் தமது வேலைவாய்ப்புக்காக வீதிகளில் தடுமாறுகின்றார்கள். வேலைவாய்ப்புக் கிடைக்காததால்தான் இளைஞர்கள் மதுபோதைக்கு ஆளாகின்றார்கள். மதுபோதையைக் கொண்டு வந்தவர்கள் யார்? 2009 மே 18இற்குப் பின்னர் போரை முடிவுக்கொண்டு வந்த அரசு, அரசியல்வாதிகளின் ஊடாக அவர்களுடைய வாகனங்களிலே போதைப்பொருள்களை வடக்கு கிழக்கு அனுப்பினார்கள். போதைப்பொருளின் ஆதிக்கம் இன்று வடக்கு கிழக்கிலே தலைதூக்குகின்றது.

இதற்கு அப்பால் நாம் எப்படி அரசியல் பேச முடியும்.
போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தைக் கொடுத்ததா? அல்லது படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதா? ஒன்றுமே செய்யப்படவில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன வருமானம் உண்டு.

ஆனால் எங்களுடைய சமூகதத்தில் முன்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் இல்லை யாரிடமும் கையேந்திய வரலாறும் இல்லை. எங்களுடைய கைகளிலே நாம் வாழ்ந்தோம். 12 ஆயிரம் முன்னாள் போராளிகள். இவர்களுக்கு எங்களுடைய ஜனாதிபதி என்ன செய்திருக்கின்றார். அரசால் வழங்கப்படுகின்ற நிதியை நிராகரித்திருக்கின்றார். தெற்கில் தான் வெல்வதற்காக எமது முன்னாள் போராளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

அவர்கள் மனிதர்களில்லையா? ஆயுதத்தை ஏந்தியதால் அவர்கள் மனிதர்கள் இல்லை என்று நீங்கள் நிராகரிக்கின்றீர்களா? நாங்கள் தலையால் நடந்து எங்கள் ஒற்றுமையுடன் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக ஆக்கினோம். ஆனால் அவருக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எமக்கு எதிராக அவர் அமைச்சர்களாக நியமித்துள்ளார். அதனைத்தான் அவர் வடக்கு மக்களுக்கு செய்துள்ளார் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com