சற்று முன்
Home / செய்திகள் / நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 4 இனாலும், டீசலின் விலை ரூபா 5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஒக்டேன் 95 இனது விலை ரூபா 4 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலையேற்றம் அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய

CPC – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
பெற்றோல் Octane 92 – ரூபா 145 இலிருந்து ரூபா 149 ஆக ரூபா 4 இனாலும்
பெற்றோல் Octane 95 – ரூபா 157 இலிருந்து ரூபா 161 ஆக ரூபா 4 இனாலும்
ஒட்டோ டீசல் – ரூபா 118 இலிருந்து ரூபா 123 ஆக ரூபா 5 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 130 இலிருந்து ரூபா 133 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 4 இனாலும், டீசலின் விலை ரூபா 5 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பெற்றோல் ஒக்டேன் 95 இனது விலை ரூபா 4 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

IOC – இந்தியன் ஒயில் நிறுவனம்

பெற்றோல் Octane 92 – ரூபா 146 இலிருந்து ரூபா 150 ஆக ரூபா 2 இனாலும்
பெற்றோல் Octane 95 – ரூபா 160 இலிருந்து ரூபா 164 ஆக ரூபா 4 இனாலும்
ஒட்டோ டீசல் – ரூபா 118 இலிருந்து ரூபா 123 ஆக ரூபா 5 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 130 இலிருந்து ரூபா 133 ஆக ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் – ரூபா 118 இலிருந்து ரூபா 123 ஆக ரூபா 5 இனாலும்
சுப்பர் டீசல் – ரூபா 130 இலிருந்து ரூபா 133 ஆக ரூபா 3 இனாலும் விலை அதிகரிப்புச் செய்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com