சற்று முன்
Home / செய்திகள் / நள்ளிரவில் விளையாட்டாக பட்டாசுகளை வெடிக்கச் செய்த இளைஞர் குழு – அச்சத்திற்குள்ளான மக்கள்

நள்ளிரவில் விளையாட்டாக பட்டாசுகளை வெடிக்கச் செய்த இளைஞர் குழு – அச்சத்திற்குள்ளான மக்கள்

மன்னாா் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவு திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகினர்.

அச்சங்குளம் விளையாட்டு மைதானத்தின் அருகில் காணப்படும் பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடிச் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக அச்சங்குளம் கடற்படையினர், முருங்கன் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பட்டாசு வீட்டுக்குள் வெடித்தபடியால் அழுத்தம் அதிகமாகி பெரும் சத்தம் கேட்டத எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறி்த்த இடத்தில் சிறு ஆணிகளும், போத்தல் துண்டங்களும் சிதறிக் கிடந்தன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களையும் படையினரையும் குழப்பமடையச் செய்யும் வகையில் சில இளைஞர்களி விளையாட்டாக பட்டாசுகளை போத்தல்களில் இட்டு வெடிக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com