சற்று முன்
Home / செய்திகள் / தொடர்ந்து ஒளிரும் புகையிரத சமிக்கை – பாரதிபுரம் மக்கள் முறைப்பாடு

தொடர்ந்து ஒளிரும் புகையிரத சமிக்கை – பாரதிபுரம் மக்கள் முறைப்பாடு

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதி வீதிக்கான புகையிரதக் கடவையில் உள்ள சமிக்கை விளக்கில் 24 மணிநேரமும் சிவப்பு சமிக்கை எரிவது தொடர்பில் புகையிரத நிலையத்தினர் கவனம்கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுச் சந்தியில் இருந்து பாரதிபுரம் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் உள்ள சமிக்கை விளக்கானது கடந்த ஒரு வாரகாலமாக 24 மணிநேரமும் சிவப்புச் சமிக்கையை மட்டுமே கான்பிக்கின்றது. இதன் காரணமாக சமிக்கையில் தவறா அல்லது பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் போக்கு வரத்துப் பொலிசாரின் தவறா என வினாவியவாறு மக்களும் செல்கின்றனர்.

இதன் காரணமாக இப் பகுதியில் தொடரூந்து வருவம் வேளையிலும் மக்கள் பயணிக்க முற்படும் சந்நர்ப்பம் ஏற்படுவதற்கு முன்னர் உடன் குறித்த தவறினை சீர் செய்ய வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

அவ்வாறு குறித்த தவறை சீர் செய்யாது இப் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் இடத்தில் குறித்த திணைக களங்களே அப்போதும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்.்எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com