சற்று முன்
Home / செய்திகள் / தையிட்டியிலும் முளைக்கிறது விகாரை

தையிட்டியிலும் முளைக்கிறது விகாரை

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1940 ஆம் ஆண்டுக்குரியதாகக் கூறப்படும் காணி உறுதியுடன் வருகைதந்த மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையிலேயே காணிகள் அளவிடப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக அவர்களால் கூறப்பட்டுள்ளது. வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் விகாரை அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறியே இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விகாரையை விட்டு 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், பிக்குகள் வெளியேறியதாக கூறப்படுகின்றது. அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதை அடுத்து, விகாரைக்கான காணி உறுதி ஆவணங்களுடன் பிரதேச செயலகத்தை அணுகிய பிக்குகள், அதை அடையாளப்படுத்தி, மீட்பதற்கான நடவடிக்கையாகவே, அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com