சற்று முன்
Home / செய்திகள் / தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!

தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
மணியுடன் பேசுங்கள் எனும் நிகழ்ச்சி நேற்றைய தினம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கருத்து தெரிவிக்கும் போது, 
கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மண் மீட்புக்காகவும் என்னால் முடிந்த காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருகிறேன். 
இம்முறை தேர்தலில் மக்கள் என்னை தெரிவு செய்யாத பட்சத்தில் நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி செயற்பாட்டாளனாக தொடர்ந்து செயற்படுவேன் என தொனிப்படும் கருத்தை தெரிவித்து இருந்தார். 
அதற்கு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த  இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆப்பிரகாம் லிங்கன் உள்ளிட்ட பலர் தோல்விகளை சந்தித்தே வெற்றி ஈட்டினார்கள். அதேபோல தோல்விகளை கண்டு துவளாது நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். 
இம்முறை இளைஞர்கள் மத்தியிலிருந்து நீங்கள் நிச்சயம் பாராளுமன்றம் செல்வீர்கள் எனும் நம்பிக்கை எமக்கு உண்டு. இருந்தாலும் தோல்வியை சந்தித்தால் கூட நீங்கள் தேர்தல் அரசியலில் இருந்து விலக கூடாது. நாம் உங்களுடன் தொடர்ந்து பயணிப்போம். என தெரிவித்தனர் 
அதற்கு பதிலளித்த மணிவண்ணன் , தேர்தலின் பின்னர் வெற்றியோ தோல்வியோ மீண்டும் இளைஞர்களை சந்திக்க தீர்மானித்துள்ளேன். இளைஞர்களுடன் பேசி நிச்சயம் நல்ல முடிவை எடுப்பேன். 
இந்த தேர்தலில் என் வெற்றிக்காக என்னுடன் உழைக்கும் பலர் சம்பளத்திற்காகவோ சலுகைகளுக்காகவோ சேர்ந்து இயங்கவில்லை. நானும் வேலை பெற்று தருகிறேன் , சலுகைகளை பெற்று தருவேன் என வாக்குறுதிகளை யாருக்கும் வழங்கவில்லை. எனக்காக வேலை செய்பவர்களில் பலரும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அவர்கள் எதனையும் எதிர்பார்த்து என்னகாக உழைக்கவில்லை .  
எமது உரிமைகளை வென்றெடுக்கவும் , பறிபோகும் எம் மண்ணை மீட்டெடுக்கவும் என்னுடன்  கைகோர்த்து உள்ளனர். அவர்களுடன் இணைந்து வெற்றியடைவேன் என நம்புகிறேன். எம் கைகளை பலப்படுத்த அனைவரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார். 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com