சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / தெல்லியூர் ரைரன்சை 54 ஓட்டங்களால் வீழ்த்தியது வேலணை வேங்கைகள்

தெல்லியூர் ரைரன்சை 54 ஓட்டங்களால் வீழ்த்தியது வேலணை வேங்கைகள்

JSL சுற்றுத் தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் தெல்லியூர் ரைரன்ஸ் அணியை எதிர்த்து வேலணை வேங்கைகள் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தெல்லியூர் ரைரன்ஸ் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

முதலிலே துடுப்பெடுதாடிய வேலணை வேங்கைகள் அணியினர் 19.5 பந்து பரிமாற்றங்களை எதிர் கொண்டு அனைத்து இலக்கங்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் பாணுஷன் 45 ஓட்டங்களையும் ஆதித்தன் 27 ஓட்டங்களையும் லிங்கநாதன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்ட நாயகன்

பந்து வீச்சில் தெல்லியூர் ரைரன்ஸ் அணி சார்பாக 2.5 பந்துப்பரிமாற்றங்களில் மதுஷன் 20 ஓட்டங்களை விட்டு கொடுத்து 3 இலக்கங்களை சாய்த்தார் விஸ்ணுபிரகாஷ் 3 பந்துப்பரிமாற்றங்களை வீசி 34 ஓட்டங்களை கொடுத்து 2 இலக்குகளை சாய்த்தார்.

178 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என துடுப்பெடுதாடிய தெல்லியூர் ரைரன்ஸ் அணியினர் 20 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். சுஜாந்தன் 35 ஓட்டங்களையும் அஜீத் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

வேலணை வேங்கைகள் அணி சார்பாக விதுஷன் 2 பந்துப்பரிமாற்றங்களை வீசி 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்கங்களை சாய்த்தார். கோகுலன் 3.2 பந்துப்பரிமாற்றங்களை வீசி 31 ஓட்டங்களை கொடுத்து 3 இலக்குகளை சாய்த்தார்.

54 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாவது போட்டியில் வேலணை வேங்கைகள் அணி வீரர் விதுஷன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com