சற்று முன்
Home / உலகம் / தெரச மே இற்கு பின்னடைவு – பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம்

தெரச மே இற்கு பின்னடைவு – பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட தெரசா மே, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டார். அதனால், பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும், பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க இயலவில்லை. மொத்தமாக 326 இடங்களைப் பெற்றால் மட்டுமே வெற்றி என்ற சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், மொத்தமுள்ள 650 இடங்களில், ஆளுங்கட்சி இதுவரை 315 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான லேபர் கட்சி 261 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com