சற்று முன்
Home / செய்திகள் / தூய கரங்கள் தூய நகரம் கொள்கையை நடைமுறைப்படுத்த சபையின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்

தூய கரங்கள் தூய நகரம் கொள்கையை நடைமுறைப்படுத்த சபையின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்

தூய கரங்கள் தூய நகரம் கொள்கையை நடைமுறைப்படுத்த சபையின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் என யாழ்.மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

எங்களுடைய கட்சி சில வேலைத்திட்டங்களை ஏற்கனவே கூறி இருந்தது. அதனை முன்னெடுத்து செல்வதற்கான பிரேரணைகளை எதிர்வரும் காலத்தில் பிரேரிப்போம். அதனை மாநகர சபை ஏற்றுக்கொண்டால் அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். நாங்கள் சபையை முழுமையான ஒற்றுமையுடன் மாநகரத்தை மேம்படுத்தும் செயற் திடங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

தூய நகர வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பிரேரணைகளை பிரேரிப்போம் சபையில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்றால் முழுமையாக திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

எங்களின் கொள்கை தூய கரங்கள் தூய நகரம் என கூறி உள்ளோம் எனவே இந்த சபை ஊழல் அற்ற சபையாக கொண்டு நடத்த எம்மால் ஆனா சகல நடவடிக்கையும் எடுப்போம். சபையின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். 2020 ஆம் ஆண்டுக்குள் மாநகரத்தை மாற்றி அமைக்க திட்டங்களை வைத்துள்ளோம். சபை ஏற்றுக்கொண்டால் அதனை நாம் நடைமுறைப்படுத்துவோம் என தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com