சற்று முன்
Home / செய்திகள் / திலீபனை நாடுகடத்திய அவுஸ்ரேலியாவிற்கு ஐ.நா அகதிகளுக்கான அமைப்பு கண்டனம்

திலீபனை நாடுகடத்திய அவுஸ்ரேலியாவிற்கு ஐ.நா அகதிகளுக்கான அமைப்பு கண்டனம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை அகதியான திலீபன் நாடு கடத்தப்பட்டமைக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

திலீபன் என்ற ஈழத்து புகலிட கோரிக்கையாளரை, மனைவி மற்றும் 11 மாத குழந்தையிடம் இருந்து பிரித்து அவுஸ்திரேலியா நேற்று நாடு கடத்தியிருந்தது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

“அகதிகளை அங்கீகரிக்கும் நாடு என்ற வகையில் அவுஸ்திரேலியா குடும்பங்களை பிரித்து வைக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். இதுவொரு கூடாத செயல். திலீபனை தனியாக நாடு கடத்த கூடாது என பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்திய போதிலும், அவுஸ்திரேலியா அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளவில்லை.

ஒரு குடும்பம் என்றும், குழந்தை மீதான அக்கறை தொடர்பான அடிப்படைகள் இந்த விடயத்தில் பின்பற்றப்படவில்லை. இவ்வாறான பல சம்பவங்கள் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளன. எனவே குறித்த விடயங்களில் அவுஸ்திரேலியா அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம்” கோரிக்கை விடுத்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com