சற்று முன்
Home / சினிமா / தமிழ் சினிமாவில் 2015 முத்தான 10 திருமணங்கள்

தமிழ் சினிமாவில் 2015 முத்தான 10 திருமணங்கள்

இந்த 2015 ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து தங்களது பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்களில் யுவன் ஷங்கர் ராஜா, சாந்தனு, ஆரி, கணேஷ் வெங்கட்ராம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தாங்கள் காதலித்த துணையையே வாழ்க்கைத் துணையாகவும் ஆக்கிக் கொண்டனர். காதல் மற்றும் பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணங்கள் என்ற கலவையில் அமைந்த திரைப் பிரபலங்களின் திருமண கோலாகலங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜா – ஜாபருன்னிசா

முதல் 2 திருமணங்கள் தோல்வியில் முடிந்து விவாகரத்து வரை சென்றதில் மிகவும் நொந்து போன யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஜாபருன்னிசா என்ற பெண்ணை 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த வருட புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு நெருங்கிய வட்டாரங்களை கூட அழைக்கவில்லை யுவன். யுவனின் 3 வது திருமணத்திற்கு தந்தை இளையராஜா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யுவன் தந்தையாகப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அருள்நிதி – கீர்த்தனா

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகன் அருள்நிதி – கீர்த்தனா திருமணம் ஜூன் மாதம் 8 ம் தேதியன்று சென்னை அறிவாலயம் அரங்கில் நடைபெற்றது. டிமாண்டி காலனி மூலம் வெற்றி நாயகனாக மாறிய அருள்நிதி தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விதார்த் – காயத்ரி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவரான விதார்த் – காயத்ரி திருமணம் ஜூன் மாதம் 11 ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. பெற்றோர் பார்த்து மணமுடித்த திருமணம் இது. மைனா மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த விதார்த் தற்போது குற்றமும் தண்டனையும் மற்றும் விழித்திரு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சாந்தனு – கீர்த்தி

இயக்குநர் பாக்யராஜின் மகனும், வளரும் இளம் நாயகனுமான சாந்தனு தனது காதலி கீர்த்தியை ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி மணம் புரிந்து கொண்டார். இவர்கள் இருவரின் திருமணத்திற்கு நடிகர் விஜய் வந்து தாலி எடுத்துக் கொடுத்தது கொஞ்ச நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சரண்யா மோகன் – அரவிந்த் கிருஷ்ணன்

சரண்யா மோகன் – அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் செப்டம்பர் மாதம் 6 ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றது. பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை மணந்த சரண்யா மோகன் திருமணதிற்குப் பின் சினிமாவை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமி – பெரோஸ் முகம்மது


நடிகை விஜயலட்சுமி உதவி இயக்குநர் பெரோஸ் முகம்மது காதல் திருமணம் செப்டம்பர் 28 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. திருமணதிற்குப் பின்னர் சினிமாவை விட்டு விலகிய நடிகைகளில் விஜயலட்சுமியும் இணைந்து கொண்டார்.இந்து முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆரி – நதியா

மாயா, நெடுஞ்சாலை படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரி லண்டனைச் சேர்ந்த நதியாவை காதலித்து நவம்பர் 18 மணம் புரிந்து கொண்டார். ஆரி தற்போது மானே தேனே பேயே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கணேஷ் வெங்கட்ராம் – நிஷா

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தொகுப்பாளினி நிஷாவைக் காதலித்து நவம்பர் 22 ம் தேதி திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து தனது 35 வருட பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தனி ஒருவன் படத்தின் மூலம் புகழ்பெற்ற கணேஷ் வெங்கட்ராம் தற்போது தனது முதல் பட நாயகி த்ரிஷாவுடன் இணைந்து நாயகி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

நிமிஷா சுரேஷ் – ஜிஜேஷ் ஜனார்த்தனன்

நினைத்தது யாரோ நாயகி நிமிஷா சுரேஷ் – ஜிஜேஷ் ஜனார்த்தனன் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நவம்பர் 29 ம் தேதி நடைபெற்றது. நினைத்தது யாரோ பெரியளவில் கைகொடுக்காததால் தமிழில் வேறு படங்கள் எதிலும் நிமிஷாவைக் காண முடியவில்லை.

சந்தியா – வெங்கட் சந்திரசேகரன்

காதல் படத்தில் அறிமுகமான நடிகை சந்தியா – வெங்கட் சந்திரசேகரன் திருமணம் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. தனது திருமண செலவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக சந்தியா தெரிவித்து இருந்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com