சற்று முன்
Home / செய்திகள் / தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேசத்திற்குப் பொறுப்பாளர் வேணுகோபனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

“குறித்த சம்பவம் நேற்று இரவு மேற்கெள்ளப்பட்டது. முன்னரும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவை சிறியளவிலான தாக்குதல் முயற்சி என நாங்கள் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. ஒருமுறை எமது அலுவகலப் பெயர்ப்பலகையின்மேல் இறந்த ஒருவரது கண்ணீரஞ்சலி பதாகையினை கொண்டுவந்து ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள்.

நாங்கள் சாவகச்சேரியில் பலமுள்ளவர்களாக இருக்கிறோம். தொடர்ச்சியாக இளைஞர்களைத் திரட்டி சமூகநல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். இதனைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்” – என்றார் அவர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com