சற்று முன்
Home / செய்திகள் / “தமிழ்த் தலைவி” – முன்னாள் அமைச்சர் விஜயகலாவுக்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரொட்டிகள்

“தமிழ்த் தலைவி” – முன்னாள் அமைச்சர் விஜயகலாவுக்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரொட்டிகள்

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.

இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

அத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந் நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அளிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா என்று குறிப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com